மாகாண வருமானத் திணைக்களம் மத்திய மாகாணம் • மத்திய மாகாண சபை · இலங்கை

முத்திரைத் தீர்வை செலுத்தும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குதல்

முத்திரைத் தீர்வை செலுத்தும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குதல் | மாகாண வருமானத் திணைக்களம் – மத்திய மாகாணம்

இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் (2025–2030) நடைமுறைப்படுத்தப்படுவதையும், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய மாகாணத்தில் அசையாச் சொத்துப் பரிமாற்றங்களுக்காக அறவிடப்படும் முத்திரைத் தீர்வையைச் செலுத்தும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு மத்திய மாகாண வருவாய்த் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

1990 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிதி நியதிச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, முத்திரைத் தீர்வை செலுத்தும் செயல்முறையை மேலும் வினைத்திறன் மிக்கதாகவும், இலகுவானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 2026 நவம்பர் 2 ஆம் திகதி முதல் குண்டசாலை காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து ஆவணங்களுக்கும் புதிய டிஜிட்டல் செயல்முறை முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, 2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து காணிப் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இச்செயல்முறையை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

நோட்டரிமார்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை

இச்செயல்முறையின் முக்கிய பங்குதாரர்களான நோட்டரிமார்கள், மத்திய மாகாண வருவாய்த் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று Online Stamp Duty Portal இனை அணுக வேண்டும். அதன் பின்னர், “Notary” எனும் பிரிவைத் தெரிவுசெய்து, பதிவுச் செயன்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்தப் புதிய நடைமுறையின் கீழ், ஆவணங்களைப் பதிவு செய்யும்போது உரிய முத்திரைத் தீர்வையைச் செலுத்துவதற்காக கட்டணக் குறிப்பு இலக்கத்தை (Payment Reference Number) பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் மூலம், முத்திரைத் தீர்வை செலுத்தும் செயல்முறையை முறைப்படுத்தி, நிர்வாக வினைத்திறனை மேம்படுத்துவதுடன், அரச சேவைகளின் தரத்தையும் அணுகுதன்மையையும் உயர்த்துவதற்கு திணைக்களம் எதிர்பார்க்கிறது.

← செய்திகளுக்குத் திரும்புக

முத்திரைத் தீர்வையை இணையவழியாகச் செலுத்தி நிர்வகிக்கவும்

நொத்தாரிசுகள், காணிப் பதிவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உத்தியோகபூர்வ இணையவழி வாயிலின் ஊடாக உறுதிகளைச் சமர்ப்பித்து முத்திரைத் தீர்வையைக் கண்காணிக்கலாம்.

இணையவழி முத்திரைத் தீர்வை வாயில்
இணையவழி முத்திரைத் தீர்வை வாயில்